இசைப்பயணத்தில் கண்ணீர் மல்க விடைபெற்றார் ஜானகி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, மைசூரில் நடந்த இசைக்கச்சேரியில், இதுதான் எனது கடைசி இன்னிசை நிகழ்ச்சி என்றும் இனிமேல் பாடப்போவதில்லை என ரசிகர்கள் முன்னிலையில் கண்கலங்கி விடைபெற்றுள்ளார்.

1952 ஆம் ஆண்டு தனது இசைப்பயணத்தை தொடங்கி ஜானகி, பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

ரசிகர்களால் பூங்குயில் என அழைக்கப்படும் இவருக்கு 80 வயதாகிவிட்டது.

தனது முதுமை காரணமாக இனிமேல் பாடப்போவதில்லை என ஜானகி கடந்த வருடம் அறிவித்து விட்டாலும், அவரது ரசிர்கள் அவர் தொடர்ந்து பாட வேண்டும் என கூறிவருகின்றனர்.

இந்நிலையில், மைசூரில் வசித்து வரும் கேரள தொழில் அதிபரும் எஸ்.ஜானகியின் ரசிகருமான மனுமேனன் எஸ்.ஜானகியின் கச்சேரியை மைசூரில் நடத்த ஏற்பாடு செய்தார்.

கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில் சுமார் 4 மணிநேரம் எஸ்.ஜானகி தனது இன்னிசை மழையை பொழிந்தார்.

பல பாடல்களை பாடும்போதும் அவர் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டார். அதை பார்த்த ரசிகர்களும் உருகிப்போனார்கள்.

அவருக்கு நினைவு பரிசு, பொன்னாடை என்று மரியாதைகள் செய்யப்பட்டன. இவற்றை ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க ஏற்றுக்கொண்ட எஸ்.ஜானகி இதுதான் தனது கடைசி இன்னிசை நிகழ்ச்சி என்றும் இனி சினிமாவிலும் பாடப் போவது இல்லை கண்ணீர் மல்க கூறி விடைபெற்றார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்