ஆண்களுடன் உறவில் இருக்க விரும்புகிறேன்: பிரபல நடிகர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

ஆண்களுடன் உறவில் ஈடுபடுவதை நான் விரும்புகிறேன் என ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் கெவின் ஸ்பேஸி வெளிப்படையாக அறிவித்துள்ளது ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தோணி ராப் என்ற நடிகர், 30 வருடங்களுக்கு முன்பு நடிகர் கெவின் ஸ்பேஸி, பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் அந்த சம்பவம் என்னை அதிகம் பாதித்தது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கெவின் ஸ்பேஸி, 30 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எனக்கு நினைவில்லை, அப்படி நடத்திருந்தால் நான் குடிபோதையில் இருந்திருப்பேன்.

இதற்காக நான் அந்தோணியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்னை பற்றி வெளி உலகில் சில கதைகள் உலாவுகின்றன. அவை அனைத்தையும் அதிக பாதுகாப்பாக நான் இருக்க வேண்டும் என்று கருதியதால் உருவானவை.

எனது வாழ்க்கையில், ஆண் பெண் என இரு பாலினருடனும் நான் உறவில் இருந்துள்ளேன் இது எனக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியும். ஆண்களுடன் உறவில், காதலில் இருப்பதை நான் விரும்பியிருக்கிறேன்.

இது எனது சொந்த நடத்தையை பரிசோதனை செய்வதாகும், இதில் நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்