பிரபல பாடகி பி.சுசீலா இறந்துவிட்டாரா? அவரே அளித்த விளக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாடகி பி.சுசீலா இறந்துவிட்டார் என வதந்தி பரவிய நிலையில் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக திகழும் பி.சுசீலா தற்போது 80 வயதை கடந்துள்ளார்.

சுசீலா உயிரிழந்து விட்டதாக நேற்றிரவு முதல் சமூகவலைதளங்களில் வதந்தி பரவி வந்தது.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பி.சுசீலா, நான் அமெரிக்காவில் இருக்கிறேன், நாளை இந்தியாவுக்கு திரும்புகிறேன்.

என்னை பற்றி பல்வேறு வதந்திகள் வருகிறது, அதை யாரும் நம்பவேண்டாம், நான் நலமாக உள்ளேன்.

இந்தியாவுக்கு வந்த பின்னர் வேண்டுமானால் என்னிடம் செய்திளார்கள் நேர்காணல் செய்யலாம் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்