நடிகர் ஆர்யாவை கல்யாணம் செய்து கொள்ள ஆசையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் ஆர்யா தனது திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருப்பதாகவும், என்னை உங்களுக்கு பிடித்திருந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள் என கூறி டுவிட்டர் பக்கத்தில் ஒரு நம்பரை வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, நான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த வாரம் ஜிம்மில் பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியானது.

அது உண்மைதான், நான் திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னை உங்களுக்கு பிடித்திருந்தால், நான் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையாக இருப்பேன் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்கன்னா, இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 73301 73301.

இது விளையாட்டான ஒன்று என நினைக்காதீர்கள். இது என்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் தயவுசெய்து கால் பண்ணுங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்