புது அவதாரம் எடுத்த நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

கடந்த ஒரு வருடமாக குடும்ப பிரச்சனையால் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தற்போது புது ஆளாக மாறி பேஷன் ஷோவில் கலக்கியுள்ளார்.

நவம்பர் 19-ம் தேதி பெண் பெண் தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் வண்ண ஆபரணங்களோடு அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ரொம்ப நாளா கணவர், குழந்தைனு சாதாரணக் குடும்ப பொண்ணாவே வாழ்ந்துட்டேன். சமூக சேவையில் அதிக ஆர்வம் இருந்ததால 'WE - Women Endeavor ' அமைப்பு ஆரம்பித்துள்ளேன்.

இது முற்றிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான அரசு சாரா அமைப்பு. அதுமட்டுமில்ல 'தி பீ ஸ்கூல் (The Bee School) எனும் குழந்தைகள் விளையாட்டு பாடசாலை, 'கேட்ச் என்டெர்டெய்னர்ஸ் (Catch Entertainers) எனும் நிகழ்ச்சி மேலாண்மை அமைப்பும் தொடங்கியிருக்கேன்.

சமூக ஆர்வலரான எனக்கு முற்றிலும் பக்கபலமாக இருப்பது என் தந்தை. சமீபத்தில் கசிந்த என் மணவாழ்வின் கசப்பான பக்கங்கள்தான் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால், என்னுள் இருக்கும் மறுபக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த Wei - Fa அமைப்புக்கு நன்றி. என் மகள் போஷிகாவுடன் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கு. 'சிங்கிள் மாம் (Single Mom)' என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்