தானுவை சாகச் சொல்லுங்கள்..அவர் குடும்பத்திற்கு நான் உதவுகிறேன்: நடிகர் ஆவேசம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

தயாரிப்பாளர் தானுவை சாகச் சொல்லுங்கள் அவரது குடும்பத்திற்கு நான் உதவி செய்கிறேன் என்று நடிகர் அமீர் ஆவேசமாக கூறியுள்ளார்.

சசிக்குமாரின் உறவினரான அசோக் குமார் கடந்த 21-ஆம் திகதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கு முன் எழுதிய கடிதத்தில் அன்புச்செழியன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டியதால் வேறுவழியின்றி தற்கொலை செய்யும் முடிவிற்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் நடிகர் விஷால் இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

இதையடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறி அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு அசோக் குமாரின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், அனைவரும் கூறுவது போல் அன்புச்செழியன் கெட்டவர் இல்லை என்றும் அவரைப் போன்றவர்களை நம்பித் தான் சினிமா துறை இயங்கிக் கொண்டிருப்பதாக கூறினார்.

தான் சசிகுமாரை வைத்து படம் எடுத்து அதில் வரும் பணத்தை அசோக் குமாரின் குடும்பத்திற்கு கொடுக்க போவதாக கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த அமீர் வேண்டுமென்றால் தானுவை சாகச் சொல்லுங்கள், நான் படம் எடுத்து அதில் வரும் பணத்தை அவர் குடும்பத்திற்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...