பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

உடல்நலக்குறைவு காரணமாக இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்திரைப்பட உலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கங்கை அமரன். இவருக்கு கடந்த 30-ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனையில் உப்புசத்து குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் உடல் நலம் தேறி உள்ளார்.

கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பா.ஜ.க கட்சி சார்பில் வேட்பாளராக கங்கைஅமரன் நிறுத்தப்பட்டார்.

ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 24-ம் திகதி மீண்டும் ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் கங்கைஅமரன் மீண்டும் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால் இதை பா.ஜ.க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்