பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தமிழ்த் திரைப்படஇசையமைப்பாளர் ஆதித்யன் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

நடிகர் கார்த்திக் நடித்த அமரன் தொடங்கி, சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி வரை 25 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் ஆதித்யன் (63)

இவர் இசையமைத்ததில் லக்கிமேன், மாமன் மகள், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றன.

சில காலமாக சினிமாவிலிருந்து ஒதுங்கி ஆதித்யன் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதித்யன் நேற்றிரவு உயிரிழந்தார்.

தற்போது திரையுலகில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் டி.இமான் இவரின் சிஷ்யன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்