டுவிட்டரில் மிரட்டல்: தனுஷ் பட நடிகை பொலிசில் புகார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
98Shares

டுவிட்டரில் தனக்கு மிரட்டல் வருவதாக பிரபல நடிகை பார்வதி கேரள மாநில காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழில் நடிகர் தனுஷுடன் மரியான் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பார்வதி.

மலையாளத்தில் முன்னணி நடிகையான இவர் திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது நடிகர் மம்முட்டி நடித்த கசாபா படத்தில் பெண்களுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதை தொடர்ந்து டுவிட்டரில் பார்வதிக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்ததோடு சிலர் அவருக்கு பகிரங்கமாக மிரட்டலும் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்து பார்வதி டுவிட்டரில் கருத்து கூறிய நிலையில் மிரட்டல்கள் அதிகரிக்க தொடங்கின.

இதையடுத்து கேரள மாநில காவல் துறை ஆணையரிடம் பார்வதி தனக்கு வரும் மிரட்டல் குறித்து புகாரளித்தார்.

புகாரையடுத்து சைபர் பிரிவு பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்