தன்னுடைய ரசிகரின் இழப்பை தாங்க முடியாமல் நடிகர் கார்த்தி கதறி அழுதுள்ளார்.
'கார்த்தி மக்கள் நல மன்றத்தின்’ திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜீவன்குமார், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
இதில் ஜீவன்குமார், தினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இருவர் பலியாகினர்.
தகவலறிந்து திருவண்ணாமலைக்கு சென்ற நடிகர் கார்த்தி, அஞ்சலி செலுத்திய போது கதறி அழுதார், மேலும் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விபத்தில் பலியான ஜீவன்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.