பிரபல நடிகை பார்வதி மேனனுக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

Report Print Santhan in பொழுதுபோக்கு
32Shares

பிரபல திரைப்பட நடிகையான பார்வதி மேனனுக்கு மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் சா்வதேச திரைப்படத் திருவிழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகை பார்வதி மேனன், திரைப்படங்களில் தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவான கசாபா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பெண்களுக்கு எதிரான வசனங்களை கடுமையாக விமா்சித்தார்.

இதைக் கண்ட மம்முட்டி ரசிகர்கள் பார்வதி மேனனை இணையத்தில் கடுமையாக வசைபாடினர். அதில் ஒருவர் மிகவும் மோசமாக பேசியதாக அதாவது மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் பொறுத்து பார்த்த நடிகை பார்வதி மேனன், இதற்கு மேல் விட்டால் இது ஆகாது என்று கூறி பொலிசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வடக்கன் சோபி பகுதியைச் சோ்ந்த பிரிண்டோ என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்