ஓவியாவும், நானும்: ஆரவ் ஓபன் டாக்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
143Shares

பிக்பாஸ் டைட்டிலை வென்ற பின்னர் படுபிஸியாக இருக்கும் ஆரவ் விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பின்னர் எந்த பக்கம் பார்த்தாலும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தேன்.

இதற்கு முன்னும் விளம்பர படங்களில் நடித்திருந்தாலும், அப்போதெல்லாம் மக்கள் என்னை அடையாம் கண்டுகொள்ளவில்லை.

இப்போ எங்க பார்த்தாலும் ஆரவ், செல்பி எடுத்துக்கலாமா என கேட்கும் போது சந்தோஷமாக இருக்கும், மக்களோட லவ் ரொம்ப பிடிச்சிருக்கு.

என் முழு கவனம் முழுவதும் சினிமாவில் தான் இருக்கிறது, ஒன்று, இரண்டு படங்கள் நடித்த பின்னர் விளம்பர படங்களிலும் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஓவியா நல்லா இருக்காங்க, அடிக்கடி பேசுவேன், ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போவோம், நாங்க நல்ல நண்பர்கள் தான், எனக்கு 29 வயசு தான் ஆகிறது, ரொம்ப சீக்கரமே கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிக்க வேண்டாம்னு நினைக்குறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்