விக்ரமின் தந்தை மரணம்: பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி(வீடியோ)

Report Print Santhan in பொழுதுபோக்கு
1498Shares
1498Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகரான விக்ரமின் தந்தை வினோத் ராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், மகன்கள் நடிகர் விக்ரம், அரவிந்த், மகள் அனிதா ஆகியோர் உள்ளனர்.

பரமக்குடியைச் சேர்ந்தவரான இவர் சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள வீட்டில் வசித்து வந்தார். இவர் ராஜாதி ராஜா, கில்லி, திருப்பாச்சி, கந்தசாமி, திருத்தணி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்தனர். நடிகர் விஜய்யின் மனைவியான சங்கீதா, டைரக்டர் பாலா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் தரணி, நடிகர் கார்த்திக், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்