நடுக்கடலில் சுவாசிக்க முடியாமல் தவித்த நடிகர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
170Shares
170Shares
lankasrimarket.com

’ஆக்ஸிஜன்’ என்னும் படத்திற்காக நடுக்கடலில் நடந்த படப்பிடிப்பில், நடிகர் அசோக் செல்வன் சிக்கிக்கொண்டு பின் தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

‘தெகிடி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன். இவர், தற்போது ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணனின், ‘ஆக்ஸிஜன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் காட்சி ஒன்றிற்காக, படக்குழு புதுச்சேரி அருகே நடுக்கடலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அப்போது உயரமாக எழுந்த அலை ஒன்று, நடிகர் அசோக் செல்வனை இழுத்துள்ளது.

அந்த அலைகளில் சிக்கிக் கொண்ட அசோக் செல்வனை காப்பாற்ற படக்குழு முற்பட்டபோது, அலைகள் அவரை நிலை தடுமாற செய்துள்ளது. இவ்வாறாக நடுக்கடலில் அலைகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட அசோக் செல்வன், சுவாசிக்க ஆக்ஸிஜன் இன்றி தவித்திருக்கிறார்.

பின்னர், பத்திரமாக மீட்கப்பட்ட அவர் இது குறித்து கூறுகையில், ‘இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்