தமிழ்நாட்டில் கொடி கட்டி பறக்கும் பிற மாநில நடிகர்கள் யார் எல்லாம் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு
672Shares
672Shares
lankasrimarket.com

வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழ்நாடு என்பது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் பிற மாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழ் சினிமாக்களில் பிரபலமாகி உள்ளனர். அவர்களைப் பற்றி பார்ப்போம்..

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். தற்போது இவர் தமிழகத்தில் தீவிர அரசியலில் இறங்க ஆரம்பித்துவிட்டார். அதில் முதல் படியாக ரசிகர்களை சந்தித்தார், அதன் பின் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அஜித்குமார்

தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை பதித்துள்ள நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர், இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரையும் அரசியலில் இழுக்க பல வியூகங்கள் நடந்து தான் வருகிறது, ஆனால் இவரோ அது எல்லாம் வேண்டாம் என்பது போல் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இப்படி தமிழகத்தில் கொடி கட்டி பறக்கும் இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், ஆனால் இவர் ஒரு மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டவர் நடிகர் விஷால். அதன் பின் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, இவரால் தேர்தலில் நிற்க முடியவில்லை.

இவர் சென்னையில் பிறந்தாலும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.

ஆர்யா

தற்போது இருக்கும் திரையுலகில் சாக்லெட் பாய் என்றழைக்கப்படுவர் ஆர்யா. இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் கூட தனக்கு மணப் பெண் வேண்டும் என்று கூறி வீடியோவை வெளியிட்டு வைரலானார். சென்னை பையனாக இருந்தாலும், இவர் கேரளாவைச் சேர்ந்தவர்.

அதர்வா

நடிகர் முரளியின் மகன் அதர்வா, பெங்களூரைச் சேர்ந்தவர் என்பது எத்தனை பெருக்கு தெரியும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்