கிண்டலுக்கு உள்ளான விராட் மற்றும் அனுஷ்கா சர்மா: காரணம் இதுதான்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
428Shares
428Shares
ibctamil.com

ஹிந்தி நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, தனது புதிய படத்தின் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், விராட் மற்றும் அனுஷ்கா ரசிகர்கள், இந்த போஸ்டரை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் நடித்துள்ள ‘Pari' எனும் திகில் படத்தின் போஸ்டரை, தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் அனுஷ்கா சர்மா.

அந்த போஸ்டரில் அனுஷ்கா சர்மாவின் தோல்கள் மீது கை வைத்தபடி, அவரின் பின்னால் பேய் ஒன்று நின்றிருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்திருக்கும் முதல் படம் இது என்பதால், எதிர்பார்ப்புகள் கூடியிருந்தது. ஆனால், இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு ‘Troll' செய்யப்பட்டு வருகிறது.

வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி, வெளியாக உள்ள இந்த படத்திற்கு, அனுஷ்கா சர்மாவும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்