மெர்சல் படத்தில் வந்த சர்ச்சைக்குரிய வசனம் ஏன் பேசினேன்? நடிகர் விஜய் விளக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
422Shares
422Shares
ibctamil.com

நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மெர்சல் கடந்த தீபாவளியன்று வெளியானது. இப்படம் வெளியாகிய பின்பு அரசியல் கட்சித் தலைவர்களே அந்த படத்திற்கு புரோமோசன் தேடித் தந்துவிட்டனர் என்று கூறலாம்.

ஏனெனில் அப்படத்தில் வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை? மெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம், ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது.

ஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, அரசாங்க மருத்துவமனையை பார்த்து பயப்படுறதுதான் அதிகம், அந்த பயம்தான் தனியார் மருத்துவமனையோட இன்வெஸ்ட்மென்ட் என்று படத்தில் விஜய் பேசுகிற வசனங்களுக்குத் திரையரங்குகளில் பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தனர்.

ஆனால், அனலைக் கிளப்பும் இந்த வசனத்துக்கு எதிர்ப்பாக பி.ஜே.பி போர்க்கொடி தூக்கியது.

இந்நிலையில் பிரபல தனியார் இதழ் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் மெர்சல் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அப்படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களை காரணமாக தான் பேசினேன் என்று விஜய் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்