நடிகை பாவனாவின் திருமணம் குறித்து அவரின் சகோதரர் கூறிய தகவல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனாவின் திருமணம் திட்டமிட்டபடி 22ஆம் திகதி நடைபெறும் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. இவருக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின.

இதனை இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் திருச்சூரில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களின் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். ஆனால், நவீனின் தாயார் மரணம் போன்ற சில காரணங்களால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், பாவனா - நவீனின் திருமணம் திருச்சூரில் வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேதியிலும் திருமணம் நடைபெறாது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

தற்போது இந்த தகவலை மறுத்துள்ள பாவனாவின் சகோதரர் ராஜேஷ், ஏற்கனவே திட்டமிட்டப்படி திருச்சூரில், 22ஆம் திகதி திருமணம் மற்றும் அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்