ஸ்ரீதேவி வாழ்க்கை திரைப்படமாகிறது: ஸ்ரீதேவி வேடத்தில் யார்?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
486Shares
486Shares
lankasrimarket.com

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைப்படமாக எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் மரணமடைந்தார்.

இந்நிலையில் அவர் வாழ்க்கை வரலாற்றை யாராவது திரைப்படமாக எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பிரபல பாடலாசிரியர் சிராஸ்ரீ கூறுகையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கதை மற்றும் அதற்கான நடிகை முடிவானதும் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என கூறியுள்ளார்.

இதையடுத்து இப்போதே ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க போகும் நடிகை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்