ஆஸ்கர் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

Report Print Kabilan in பொழுதுபோக்கு
147Shares
147Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் நடந்து வரும் ஆஸ்கர் விருது விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

90வது ஆஸ்கர் விருது விழா தற்போது நடந்து வருகிறது. இந்த விழாவில், மறைந்த திரைக்கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அதில், பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சர் ரோஜர் மூர், ஜோனதன் டெமி, ஜான் ஹெட், டான் ரிக்கிள்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கும், மேடையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபல பாடகர் Eddie Vedder ’Room at the Top' என்னும் பாடலை பாடினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்