கடன் பிரச்சனையில் இருந்து மீள விஷால் எடுத்த முடிவு

Report Print Kabilan in பொழுதுபோக்கு
359Shares
359Shares
lankasrimarket.com

நடிகர் விஷால் நடித்துள்ள ’இரும்புத்திரை’ மற்றும் தெலுங்கு Remake படத்தின் தயாரிப்பு உரிமை ஆகியவற்றை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளதால், அவரின் கடன் தொல்லை தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷாலுக்கு, அவரின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யின் மூலம் கடன் ஏற்பட்டது. அத்துடன் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

அதன் பிறகு, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டார், உடல்நிலை சரியில்லை என பல வதந்திகள் வெளியாகிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், விஷாலை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. வழக்கமாக விஷால் படங்களுக்கு மதுரை அன்பு என்பவர் தான், பணம் கொடுப்பார்.

ஆனால், நடுவில் நடந்த பஞ்சாயத்துகளால் விஷாலுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவே இந்த இடைவெளி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ படத்தை ‘லைக்கா’ நிறுவனம் மொத்தமாக விலைபேசி வாங்கியுள்ளது. மேலும், தெலுங்கு படம் ஒன்றின் கதையை வாங்கி Remake செய்யவும் விஷால் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தையும் ‘லைக்கா’ நிறுவனமே தயாரிக்க உள்ளது. இதனால், விஷாலின் கடன் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்