கிண்டல் செய்தால் புகார் கொடுப்பேன்: பிக்பாஸ் பிரபலம் ஆவேசம்

Report Print Printha in பொழுதுபோக்கு

நடன இயக்குநர், நடிகை என்று இருமுகங்கள் கொண்ட காயத்ரி ரகுராம் பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவரை அக்கா என ஜூலி பாசத்துடன் அழைப்பார், இவர்கள் ஓவியாவுக்கு எதிராகப் பேசியதால் ஓவியா ஆர்மியின் கோபத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் நேற்று வெளியிட்ட ட்வீட்டில், சமூக வலைதளங்களில் என்னையோ அல்லது ஜூலியையோ கிண்டலடிப்பது, கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டுவது போன்றவை இன்றே முடிவுக்கு வர வேண்டும்.

அப்படி இல்லையெனில் நான் பொலிஸில் புகார் செய்து உங்களை கண்டுபிடிப்பேன்.

அது ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் யாராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers