2 பேர்கள் மீது எனக்கு காதல் ஏற்பட்டது: நடிகை காஜல் ஓபன் டாக்

Report Print Printha in பொழுதுபோக்கு
518Shares
518Shares
lankasrimarket.com

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு 32 வயதாகிறது.

ஆனால் இவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிந்து விட்டது. எனவே காஜல் அகர்வாலுக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க அவரின் பெற்றோர்கள் அவசரப்படுகின்றனர்.

அதனால் திருமணம் எப்போது என்று காஜல் அகர்வாலிடம் கேட்ட போது,

நான் எங்கு போனாலும் எப்போது கல்யாணம், யாரை காதலிக்கிறீர்கள் என்று தான் கேட்கிறார்கள்.

என்னை காதலிப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். நானும் காதலை உணர்ந்து இருக்கிறேன். இரண்டு பேர் மீது அது ஏற்பட்டு இருக்கிறது.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒருவர் மீதும், நடிகையான பிறகு ஒருவர் மீதும் அந்த உணர்வு ஏற்பட்டது.

நடிக்க வருவதற்கு முன்னால் காதலிப்பது என்பது எளிது. ஆனால் சினிமாவுக்கு வந்து பெயர், புகழ் கிடைத்த பிறகு காதலிப்பது கஷ்டம்.

ஏனென்றால் அதற்கு நேரம் கிடைக்காது, காதலித்தால் அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும், காதலர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டும், சந்திக்க கூட நேரம் ஒதுக்க முடியா விட்டால் காதலித்து என்ன பிரயோஜனம்.

எனக்கு காதலிக்க நேரம் இல்லை, அதனால் திருமணத்திற்கும் தயாராகவில்லை, இத்தனை காலம் நடிகையாக இருக்கும் எனது பயணத்தில் நிறைய நடிகர்கள் வந்துபோய் இருக்கிறார்கள்.

அவர்களுடன் ஒரு எல்லைக்குள் தான் எனது பழக்கம் இருந்தது, ஒரு சிலரை தவிர மற்ற நடிகர்களுடன் நட்பாகவும் பழகியது இல்லை.

சினிமாவில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வருகிறது, ரசனையும் மாறுகிறது, அதற்கேற்ப என்னை நான் மாற்றிக் கொள்கிறேன்.

அதனால் எனது கதாபாத்திரங்களையும் புதிது புதிதாக தேர்வு செய்கிறேன், இதற்காக வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறேன்.

ரசிகர்களுக்கு அலுப்பு வராமல் இருக்க ஒரே மாதிரியாக நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்