கோழைத்தனமாக தெரிந்தாலும் அது உண்மை தான்: நடிகை இலியானா ஓபன் டாக்

Report Print Printha in பொழுதுபோக்கு

டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டில் ஆன நடிகை இலியானா, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

படுக்கைக்கு போக மறுத்ததாலேயே பட வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை இலியானா அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து யாராவது வெளியே சொன்னால் அவரின் கெரியர் அவ்வளவு தான்.

இது கோழைத்தனமாக தெரிந்தாலும் அது உண்மை, சில ஆண்டுகளுக்கு முன்பு தெற்கில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரை பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்.

அவரை எப்படி சமாளிப்பது என்று அந்த பெண் என்னிடம் அறிவுரை கேட்டார். உங்களுக்காக நான் முடிவு செய்ய முடியாது என்று அந்த பெண்ணிடம் கூறினேன்.

ஏனென்றால், யாருக்காகவும் யாரும் முடிவு எடுக்க முடியாது. என் முடிவை அந்த பெண் மீது திணிக்க முடியாது. அந்த தயாரிப்பாளர் சொல்வதை கேட்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஏ லிஸ்ட் நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தால் பல நடிகைகள் முன்வந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படுத்த முடியும்.

நடிகர்களை கடவுள் போன்று பார்க்கிறார்கள், அதனால் பெரிய நடிகர்களுக்கு வேறு ஒரு முகம் இருப்பதை நிரூபிக்க பலர் முன்வந்தால் மட்டுமே முடியும் என்று கூறியுள்ளார் நடிகை இலியானா.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்