பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த பிளாக் பேந்தர் திரைப்படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

கடந்த மாதம் வெளியான ‘Black Panther' எனும் ஹாலிவுட் திரைப்படம், உலக அளவில் ரூ.7,152 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படங்கள், இந்தியாவிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன.

அந்த வகையில் கடந்த மாதம் வெளியான ’Black Panther’ எனும் ஹாலிவுட் திரைப்படம், உலக அளவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்தப் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.7,152 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

கடந்த ஐந்து வாரங்களாக வசூலில் முதலிடத்தில் இருக்கும் இந்த படம், 2009ஆம் ஆண்டு வெளியான ‘Avatar' படத்தின் சாதனையை சமன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்