ரகசியமாக நடந்ததா? நயன்தாரா-விக்னேஷ் சிவனின் நிச்சயதார்த்தம்

Report Print Printha in பொழுதுபோக்கு

கேரளாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் காதல் பற்றி கேட்டால் இருவரும் பதில் அளிக்காமலே இருந்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என தெரிவித்திருந்தார்.

அண்மையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அமெரிக்காவிற்கு சென்றது ஒரு முக்கிய விடயத்தை கொண்டாடுவதற்காக என்பது தெரியவந்துள்ளது.

கேரளாவில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாம். இந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்களாம்.

நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்