ஸ்ரீதேவியின் மகள் படப்பிடிப்பு தளத்தில் செய்த காரியம்: வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி, தன் படத்தின் ஹீரோவை மடியில் அமர வைத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது ‘தடக்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு தளத்தில் ஜான்வி தனது மடியில், இஷான் கட்டாரை அமர வைத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், இஷான் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஜான்வி அவரின் தலைமுடியை கோதிவிடும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இப்புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்