சிறை தண்டனை பெற்ற சல்மான்கான்: 600 கோடி வர்த்தகம் பாதிப்பு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் சல்மான்கான் சிறை தண்டனை பெற்றதால், அவரால் ஹிந்தி திரைப்படத் துறையில் சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான், கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பின் இடையே மான் வேட்டையாடியதாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் வழக்கு விசாரணை சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், சல்மான்கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சல்மான்கானை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சல்மான்கானின் திரைப்படங்கள் குறைந்தபட்சம் 200 கோடி வரை வசூல் செய்யக்கூடியவை.

அத்துடன் அவர் ‘Race 3' எனும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. மேலும், ‘Kick 2', 'Dabaang 3' மற்றும் 'Bharath' ஆகிய படங்களிலும் அவர் நடிப்பதாக இருந்தது.

இவற்றைத் தவிர, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில், சல்மான்கானின் சிறை தண்டனையால் சுமார் ரூ.600 கோடி வரையிலான திரைப்பட வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது ஹிந்தி திரைப்பட துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திரைப்பட வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்