டைட்டானிக்கின் சாதனையை முறியடித்த பிளேக் பேந்தர்: இத்தனை கோடி வசூலா!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

சமீபத்தில் வெளியான 'Black Panther' திரைப்படம், உலகம் முழுவதும் 1.3 பில்லியன் டொலர்கள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Marvel Comics கதாபாத்திரங்களில் ஒன்றான Black Panther, ’Captain America Civil War' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு என தனி படமாக, சமீபத்தில் ‘Black Panther' என்ற பெயரிலேயே வெளியானது. இந்த படத்தில் முழுக்க கறுப்பின மக்களே நடித்துள்ளனர்.

மேலும், அவர்களின் கலாச்சாரம், தற்போது நிலவும் கறுப்பின அரசியல் என அமெரிக்காவில் நடக்கும் விடயங்களின் பிரதிபலிப்பாகவே இந்தப் படம் உருவாகியுள்ளதால், உலக அளவில் பேரும் வரவேற்பைப் பெற்றது.

அத்துடன், அதிக வசூல் சாதனை புரிந்திருந்த ‘Titanic' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை 'Black Panther' முறியடித்துள்ளது. ’Titanic' படம் அமெரிக்காவில் 659 மில்லியன் டொலர்கள் வசூல் செய்திருந்தது.

ஆனால், 'Black Panther' 665 டொலர்கள் வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 1.3 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் 8,400 கோடிக்கும் மேல்) வசூல் செய்துள்ளது 'Black Panther'.

8வது வாரமாக தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ள 'Black Panther', இதுவரை வெளிவந்த ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் 3வது இடத்தில் உள்ளது.

விரைவில் ‘The Forec Awakens', 'Avatar' படங்களின் வசூல் சாதனையையும் 'Black Panther' முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்