இனி திரைப்படத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை: நடிகர் விஷால் அறிவிப்பு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

திரைப்படங்களுக்கான கட்டணம் இனி படங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 1ம் திகதி முதல் திரைத்துறையினர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் திரைத்துறை அமைப்பினர் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தயாரிப்பாளர் சங்க கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு திரையரங்க உரிமையாளர்களும், கியூப் நிறுவனத்தினரும் மறுப்பு தெரிவித்து வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்தது.

அதன் பிறகு, டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு ஆறுமாத கால அவகாசம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், வேலை நிறுத்தம் திரும்பப் பெறுவது தொடர்பாக அறிவிக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக விஷால் கூறுகையில், ‘ஜூன் 1ஆம் திகதி முதல் தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனையை ஒரே தளத்தில் இயங்கும் வகையில் செய்ய இருக்கிறோம்.

இனி படங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதுவரை ரூ.9000 வசூலித்த டிஜிட்டல் சேவை கட்டணம், ரூ.5000 ஆக மாற்றப்பட்டுள்ளது.

டிக்கெட் கட்டணம் மக்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது. திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்தவும் குழு அமைத்துள்ளோம். முதலமைச்சருக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்