உலகப்புகழ் பெற்ற இசைப்பாடகர் அவிக்கி மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
211Shares
211Shares
lankasrimarket.com

உலகப்புகழ் பெற்ற பிரபல இசைப்பாடகரான அவிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 28-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான அவிக்கிக்கு குடிப்பழக்கம் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு பித்தப்பை அகற்றப்பட்டது.

அதன்பின்னர் அவிக்கியின் உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஓமன் நாட்டில் தங்கியிருந்த அவர், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மறைந்த அவிக்கி இருமுறை கிராமி விருதுகள், எம் டிவி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

மேலும், ஒருநாள் இசை நிகழ்ச்சிக்காக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் வாங்கியவர் அவிக்கி.

அவிக்கியின் திடீர் மரணம் உலகெங்கிலும் உள்ள அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்