கமல்ஹாசனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூப்பர் ஸ்டார்!

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
64Shares
64Shares
lankasrimarket.com

பிக் பாஸ் நிகழ்ச்சியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

தமிழ், தெலுங்கு நிகழ்ச்சியை பார்த்த கேரள மக்கள் மலையாளத்தில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லையே என்று ஏங்கிய நிலையில் இந்தாண்டு மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்படுகிறது.

மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

இறுதியில் மோகன்லாலை தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்