படுக்கைக்கு அழைத்தால் சும்மா விட மாட்டேன்: கொந்தளித்த நடிகை

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தெலுங்கு திரையுலகில், நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், தன்னை யாராவது அவ்வாறு அழைத்தால் சும்மா விட மாட்டேன் என்று நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. இவர் தற்போது தமிழில் நயன்தாராவுடன் ‘இமைக்கா நொடிகள்’, ஜெயம் ரவியுடன் ‘அடங்கமறு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ராஷி கண்ணாவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எனக்கு அது மாதிரி சம்பவங்கள் இதுவரை நடக்கவில்லை. என்னை யாரேனும் அழைத்தால் சும்மா விட மாட்டேன்.

அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பேன். போராடவும் தயங்க மாட்டேன். எனக்கு யார் மீதும் பயம் கிடையாது. சமீபத்தில் ஜார்ஜியா சென்ற போது மலைப்பாம்பையே கையில் பிடித்து, பக்கத்தில் நின்றவர்களை அதிர வைத்தேன்.

இந்த தைரியம் எனது பாட்டியிடம் இருந்து வந்தது. அவருக்கும் பயம் கிடையாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்