உலகப் புத்தக தினத்தில் தமன்னா பரிந்துரைத்த புத்தகம்: வெளியிட்ட வீடியோ

Report Print Kabilan in பொழுதுபோக்கு

உலகப் புத்தக தினமான இன்று, நடிகை தமன்னா ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இன்று புத்தக தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா புத்தகம் ஒன்றை பரிந்துரை செய்து வீடியோ ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘புத்தகங்கள் தான் வாழ்க்கையின் சிறந்த நண்பன். நம் வாழ்நாள் முழுக்க கூடவே பயணிக்கக்கூடியவை. இன்று உலகப் புத்தக தினம். நான் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

விரைவில் வெளி வர உள்ள Payal Gidwani-யின் ‘Own the Bump' புத்தகத்தை வாங்கி படியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்