பிரபல பின்னணி பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி காலமானார்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

பழம்பெரும் பாடகரான எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட பாடலக்ளை பாடியுள்ளவர் பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி.

தொடக்க காலத்தில் ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் படங்களில் மட்டும் பாடல்களை பாடி வந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி,

அந்த நிறுவனத்தின் பிரபலமடைந்த திரைப்படங்களான நாம் இருவர், ராம ராஜ்யம், வேதாள உலகம், வாழ்க்கை, ஜீவிதம், ஓர் இரவு, பராசக்தி, பெண், செல்லப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.

ஏவி.எம். நிறுவனத்தின் களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல் ஹாசனுக்காக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல்தான் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய முதல் பாடல்.

மட்டுமின்றி குழந்தை நட்சத்திரமான பேபி ஷாலினிக்காக பல பாடல்களை பதிவு செய்துள்ளார் எம்.எஸ் ராஜேஸ்வரி.

பாடகி ராஜேஸ்வரி மறைக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers