சிங்கள திரையுலக ஜாம்பவான் மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
59Shares
59Shares
lankasrimarket.com

இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று தனது 99-வது வயதில் காலமானார்.

முழுநீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறுந்திரைப்படங்கள் என ஜேம்ஸ் உருவாக்கிய 28க்கும் அதிகமான படங்களில் பல சர்வதேச புகழ் பெற்றவையாகும்.

இந்திய திரைப்படங்களின் பிரதிகளாக இருந்த இலங்கை சினிமாவுக்கு நவீன யாதார்த்தத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு ஒரு செல்நெறி வகுத்தவர் ஜேம்ஸ்.

லண்டனில் சினிமா கல்வியை முடித்து இலங்கை திரும்பிய இவர், 2006ஆம் ஆண்டு வரை சினிமா துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளார்.

இலங்கையின் பிரபல புனைகதை ஆசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கதையை அடிப்படையாகக் கொண்டு இவர் தயாரித்த கம்பெரலிய ஜேம்ஸின் சிறந்த படங்களில் ஒன்றாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்