அஜீத்துக்கு பிறந்தநாளில் குவியும் வாழ்த்துக்கள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
68Shares
68Shares
lankasrimarket.com

நடிகர் அஜீத்குமாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று சமூக வலைதளங்களில் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜீத் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் #HBDThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். அஜீத் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் நிவின் பாலி ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘தங்க மனசுக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. விஸ்வாசத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிங்கப்பூரிலும் அஜீத்தை வாழ்த்தி ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருவதால் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்