பிரபல நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட 15 வயது சிறுவன்: சிக்கியது எப்படி?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென் தன்னிடம் 15 வயது சிறுவன் தவறாக நடந்து கொண்டதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென் 1994-ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா டைட்டிலை வென்றார். அதே ஆண்டில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் வென்ற இவர், அதன் பின் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டில் ஒன்றில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன்.

அங்கு கூட்டம் நிலவியதால், அப்போது யாரோ என்னிடம் தவறாக நடப்பதை உணர்ந்தேன். இதனால் உடனடியாக அந்த கையை நான் பிடித்து பார்த்த போது சற்று அதிர்ச்சியடைந்தேன்.

ஏனெனில் அவன் ஒரு 15 வயது சிறுவன். அவனை பிடித்து விசாரித்த போது, முதலில் என் மீது எந்த தவறும் இல்லை என்று கூறிய அவன், அதன் பின் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

நானும் சிறுவன் மீது புகார் அளித்தால், அவன் வாழ்க்கையே போய்விடும் என்பதால் அறிவுரை கூறி அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்