இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்: தன்னை கரம்பிடிக்க வந்த பெண் குறித்து பேசிய ஆர்யா

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை பெண் சுசானா உள்ளிட்டவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா தனக்கான ஜோடியை தேடி வந்த நிலையில் இறுதியில் யாரையும் கரம் பிடிக்கவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆர்யா நிகழ்ச்சி குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பெண்களை பற்றி பார்வையாளர்களை விட நான் அதிகம் அறிவேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி, சுசானா, சீத்தாலட்சுமி போன்றவர்களுக்கு நல்ல விடயம் நடக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களுக்கு பயனளிக்க வேண்டும், இதோடு இது அவர்களுக்கு நல்ல அங்கீகாரத்தை அளிக்கிறது.

அவர்களுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைத்தால் அதை பார்த்து மகிழ்ச்சியடையும் முதல் ஆள் நான் தான் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers