மீண்டும் பிக்பாஸ் ஆரம்பம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Trinity in பொழுதுபோக்கு
437Shares
437Shares
lankasrimarket.com

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 30ஆம் தேதி முடிவிற்கு வந்தது.

அதில் ஆரவ் ஓவியா காதல் போன்ற சுவாரசியமான நிஜ நிகழ்வுகளால் மக்கள் அதனை விரும்பி பார்த்தனர். ஓவியாவுக்கென ஒரு ஆர்மி உருவானது.

சினேகன், காயத்ரி, ஆர்த்தி, ஷக்தி, வையாபுரி போன்ற பலர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை வருகின்ற ஜூன் 17ஆம் தேதி முதல் ஆரம்பிக்க இருப்பதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் முதல் பகுதியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இதனையும் தொகுத்து வழங்குவார் என்பதையும் உறுதி செய்திருக்கிறது விஜய் டிவி .

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்