காலாவை திரையிட முடியாது: சென்னையின் முன்னணி திரையரங்கம் அதிரடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

காலா திரைப்படத்தை தங்கள் திரையரங்கில் வெளியிட முடியாது என பிரபல திரையரங்கான கமலா திரையரங்கம் தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல கமலா திரையரங்கில் காலா படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திரையிட முடியாது என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமலா திரையரங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரையரங்கின் கட்டுப்பாடு விதிக்கு அப்பாற்பட்டு டிக்கட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று காலா விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறியதாகவும், பொது மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கமலா திரையரங்கில் நாளை காலா திரைப்படத்திற்கு பதில், ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers