சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்கா சோப்ராவின் சீரியல்: மன்னிப்பு கோரிய தயாரிப்பு நிறுவனம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
96Shares
96Shares
lankasrimarket.com

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் குவாண்டிகோ சீரியலில், இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் காட்சி இடம்பெற்றிருந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோவில், ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா C.I.A அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த தொடர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம்.

குவாண்டிகோ தொடரில் சமீபத்தில் வெளியான ஒரு அத்தியாயத்தில், இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து, நியூயார்க் நகரில் அணுகுண்டை வெடிக்க சதி செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த காட்சிக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், சமூக வலைதளங்களிலும் இந்த சீரியலை பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில், குவாண்டிகோ சீரியலின் தயாரிப்பு நிறுவனம் அந்த குறிப்பிட்ட காட்சிக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்