நீ என்னுடன் நெருக்கமாக இல்லை என்று சத்தியம் செய்! பிரபல நடிகருக்கு சவால் விடும் நடிகை

Report Print Santhan in பொழுதுபோக்கு
412Shares
412Shares
ibctamil.com

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகையான ஸ்ரீரெட்டி பங்கேற்பதாக கூறப்பட்டது.

ஸ்ரீரெட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டேன் என்று நடிகர் நானி கூறியதாகவும் செய்திகள் வெளியாகியது.

இதையடுத்து ஸ்ரீரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி நடிகரான நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும், அப்படி அவர் இல்லை என்று கூறினால், அவரின் குடும்பத்தார் மீது அவர் சத்தியம் செய்ய வேண்டும் என்று சவால் விட்டுள்ளார்.

மேலும் தனக்கு வரும் வாய்ப்புகளை நானி தட்டிக்கழித்துவிடுதாகவும் கூறியுள்ளார். ஆனால் நானியோ அவர் சொல்வது எதுவும் உண்மையில்லை, யாரும் நம்ப தயாராக இல்லை என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்