ஆண்களையும் தான் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட நடிகர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
578Shares
578Shares
ibctamil.com

திரையுலகில் பட வாய்ப்புக்காக ஆண்களையும் படுக்கைக்கு அழைப்பதாக வில்லன் நடிகர் ரவி கிஷன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

வில்லன் நடிகர் ரவி கிஷன் சுமார் 30 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘பட வாய்ப்புக்காக பெண்களை மட்டும் அல்ல, ஆண்களையும் தான் அழைக்கிறார்கள். இது எல்லாம் சகஜம். இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று போக போக தான் தெரியும்.

சில நடிகைகள் நடிகர்களை கொடுமைபடுத்துகிறார்கள். படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் ஒரு போதும் முன்னேற முடியாது. உங்களை விற்று பெறும் வாய்ப்பால் உங்களுக்கு எதிர்காலம் இல்லை.

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், உங்களை விற்று தான் இந்த நிலைக்கு வந்தீர்கள் என்ற நினைப்பே உங்களை கொடுமைப்படுத்தும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங், தான் பாலிவுட்டுக்கு வந்த புதிதில் தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்