ஸ்ரீரெட்டி அடுத்து என் மீது கூட பாலியல் புகார் கூறலாம்: நடிகர் விஷால் ஆவேசம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
95Shares
95Shares
ibctamil.com

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அடுத்து தன் மீது கூட பாலியல் புகார் கூறலாம் என நடிகர் விஷால் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்களை வைத்தார். ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார்.

இதனால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து, நடிகர் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டினார். அதன் பின்னர், நானி அவதூறு வழக்கு ஒன்றை ஸ்ரீரெட்டியின் மீது தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஷால் தற்போது நானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எனக்கு நானியை நன்றாக தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர். தனிப்பட்ட காரணங்களுக்காக அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை.

நானி மீது ஸ்ரீரெட்டி தற்போது தெரிவித்த புகார் மோசமானது. நானியை பற்றி தெரிந்தவர்களுக்கு, அவர் ஆண்கள் மற்றும் பெண்களிடம் எப்படி பழகுவார் என்று நன்கு தெரியும்.

சும்மா யார் மீதாவது குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு, ஸ்ரீரெட்டி ஆதாரங்களை அளிக்க வேண்டும். அவர் யாராவது ஒருவரை தெரிவு செய்து புகார் கூறுகிறார். யார் கண்டார், அடுத்து என் மீது கூட புகார் தெரிவிக்கலாம்.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டம் சரியில்லை. எந்த பெண் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர் தன் நிலையை விளக்க பின்னரே வாய்ப்பு அளிக்கப்படும். இது சரியில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்