பிக்பாசில் சந்தோஷமாக இருக்கட்டும்னு தான் அனுப்பி வச்சேன்! என் மகன் கழுவிகிட்டு இருக்கான் என பிரபல நடிகை வேதனை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நூறு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் 15-வது போட்டியாளராக நுழைந்தவர் தான் ஷாரிக் ஹாசன். இவர் பிரபல நடிகை உமா ரியாஸ் மற்றும் நடிகர் ரியாஸ்கானின் மகன் ஆவார்.

இந்நிலையில் தனது மகன் ஷாரிக் ஹாசன் குறித்து உமா ரியாஸ் கூறுகையில், எனது மகன் மிகவும் அமைதியான பையன், இதுவரைக்கும் அவனை நான் பிரிந்ததே இல்லை. பிக் பாஸ் வீடுதான் எங்களைப் முதல் முறையாக பிரித்துள்ளது.

அவன் எங்கிட்ட மட்டும் தான் கோபப்படுவான், அப்பாவை விட எங்கிட்ட தான் மிகவும் நெருக்கமாக இருப்பான்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புனா அவன் மேல் நெகடிவ் இமேஜ் வந்துவிடுமே என்று ரியாஸ் பயந்தார். நான் தான் சின்னப் பையன் தானே மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறி அனுப்பினேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொடர்ந்து பார்த்துகிட்டு தான் வருகிறேன், அப்போது ஷாரிக் நீச்சல் குளத்தைக் கழுவிக்கிட்டு இருந்ததை பார்க்கும்போது, கண் கலங்கிவிட்டேன்.

சந்தோஷமா இருந்துட்டு வரட்டும்னுதான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனா, முதல் நாள் பார்க்கும்போதே, தேம்பி அழ ஆரம்பிச்சுட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers