வெடித்தது பிக்பாஸ் பிரச்சனை! நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா கமல்?

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு மாநில தொழிலாளர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், கமல் உட்பட தமிழகத்தை சேர்ந்த 41 பேரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்று வெகுவிமரிசையாக நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, செட் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 400 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தை சேர்ந்த வெறும் 41 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில்நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல், வெளிமாநிலத்தவரை அதிகமாக பயன்படுத்துவதை கண்டித்து 41 தொழிலாளர்களும் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிய மாட்டார்கள் என பெப்சி யூனியன் தலைவர்ஆர்.கே.செல்வமணி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து இனி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிக்பாஸ் முதல் சீசனிலும் இதுபோன்ற பிரச்சனை எழும்போது, நடிகர் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக தொழிலாளர்கள் 50 சதவிகிதம் பேரை பணியில் ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்