அமலாபாலை விவாகரத்து செய்த எனக்கு இரண்டாவது திருமணமா? மறுப்பு தெரிவிக்கும் விஜய்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
175Shares
175Shares
lankasrimarket.com

தனக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி வெளியானதற்கு இயக்குநர் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய்க்கும், பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஜய்க்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த இயக்குநர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியானது. ஆனால் இதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் இரண்டாவது திருமணம் கிடையாது என்றும் தன்னை குறித்து பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்