நடிகர் விஜய் பத்து கோடி தரவேண்டும்: நீதிமன்றத்தில் வழக்கு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
122Shares
122Shares
lankasrimarket.com

நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோர் தலா ரூ.10 கோடி நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, குறித்த பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பது போல இருந்தது.

இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் சமூகவலைதள பக்கத்திலிருந்து நீக்கியது.

இந்நிலையில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் சர்க்கார் தயாரிப்பு நிறுவனம் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை வைத்ததால் புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு நஷ்டஈடாக தலா ரூ.10 கோடியை வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்