குடி போதையில் நடிகையின் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகர் கைது

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு
218Shares
218Shares
lankasrimarket.com

பிரபல பெங்காலி நடிகர் ஜாய்குமார் முகர்ஜி, குடிபோதையில் நடிகை சயந்திகாவை தாக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெங்காலியில் பிரபல நடிகராக வலம்வரும் ஜாய்குமார் முகர்ஜி, கடந்த 2010-ல் 'தி ஃபைனல் மிஷன்' என்ற படத்தில் சயந்திகாவுடன் இணைந்து நடித்ததன் மூலமாக காதல் வயப்பட்டார்.

கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த இருவருக்குமிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் இணைந்து நடித்த ‘உமா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சயந்திகாவுடன் இணைந்து வாழ முயற்சித்த ஜாய்குமார், சாயந்திகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் சாயந்திகா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அன்று இரவு மது அருந்திய நிலையில் சயந்திகாவின் வீட்டிற்கு சென்ற ஜாய், போதையில் நடிகையை தாக்கியதாக கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் அபராதம் செலுத்திய பின் பிணையில் வெளிவந்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்